ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்...??
சிங்கப்பூர்: உலக AI வளர்ச்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெரீன் யாங் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.ChatGPT-ஐ இயக்கும் மாபெரும் கணினி இயந்திரத்திற்குப் பொறுப்பாளராக, தற்போது OpenAI நிறுவனத்தில் இயக்க நேரத் துறையின் தலைவராக அவர் பணியாற்றுகிறார்.
35 பேர் கொண்ட AI பொறியாளர் குழுவை வழிநடத்தும் ஜெரீன், ChatGPT மாதிரிகளை பயிற்றுவிப்பதும், புதிய தலைமுறை பதிப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார்.
ChatGPT-யின் சமீபத்திய பதிப்பின் மானுடவியல் அம்சங்களுக்கு பின்னால் அவர் வகிக்கும் பங்கு குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஜெரீன், சிறு வயதிலேயே கணினி விளையாட்டுகள் மற்றும் கணிதத்தில் ஆர்வம் காட்டினார். இதன் காரணமாக அவர் கணினி அறிவியலில் கல்வி கற்க முடிவு செய்தார். பின்னர் அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் கணினி மற்றும் கணிதம் பயின்றார்.
அதைத் தொடர்ந்து, IO டர்பைன் எனும் ஸ்டார்ட்அப்பை நிறுவினார். அது வெற்றியடைந்தாலும், அடுத்த முயற்சியில் தோல்வியும், 50 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அனுபவமும் அவரது வாழ்க்கையில் கடின கட்டமாக அமைந்தது.
2020-இல் கூகிளில் மென்பொருள் பொறியாளராகச் சேர்ந்த ஜெரீன், 60 பேர் கொண்ட குழுவை உருவாக்கினார். AI பயிற்சி உள்கட்டமைப்பில் ஈடுபட்டு, தரவுத் துறையில் முக்கிய பங்களிப்பு செய்தார்.
இன்று OpenAI-இல், ChatGPT போன்று உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னால் நிற்கும் முக்கிய நிபுணராக, ஜெரீன் யாங் உலகளவில் சிங்கப்பூருக்கு பெருமையை தேடித் தந்தவர்.