தெருக்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் தேசிய கலை மன்றத்தின் புதிய முயற்சி..!!

தெருக்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் தேசிய கலை மன்றத்தின் புதிய முயற்சி..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தெருக் கலைஞர்களுக்கான ஒரு முன்னோடித் திட்டம் இன்று (01.12.25) தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சி நடைபெறும் அரங்குகளும் 90-ஐத் தாண்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

தேசிய கலை மன்றம் தெரிவித்ததாவது, உள்ளூர் தெருக் கலைஞர்கள் இனி ஒரே நேரத்தில் ஒன்றாக இணைந்து நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் சிங்கப்பூரில் தெரு நிகழ்ச்சிகளின் துடிப்பும், கலைஞர்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட நிகழ்ச்சி இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும்.இதில் சில முக்கிய சுற்றுலா தளங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆசிய மழைக்காடு சாகச பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட நிகழ்ச்சி இடம், அதிக இடம் தேவைப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இது சுற்றுலா தளத்தில் கலை நிகழ்ச்சி அரங்கம் நிறுவப்படும் முதல் முயற்சி ஆகும்.

தெருக் கலைஞர் வாங் சூயாங் கூறுகையில், மக்களின் அதிகரித்த வருகை மற்றும் சூழ்நிலை காரணமாக, இது மிக பிரபலமான நிகழ்ச்சி இடங்களில் ஒன்றாக மாறும் என நம்புவதாக கூறினார்.

வான்டாய் பாதுகாப்பு குழுமத்தின் சில்லறை விற்பனை மற்றும் வாழ்க்கை முறை துணைத் தலைவர் சென் டெய்சி கூறியதாவது, வான்டாய் மழைக்காடுகளுக்கு வருகிற பலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கவில்லை.அவர்கள் அதனை மிகவும் ரசிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஹாக்கர் மையங்களில் அமைக்கப்பட்ட புதிய நிகழ்ச்சி அரங்குகள் கலைஞர்களுக்கு மக்களுடன் நெருக்கமாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன.

இந்த ஆண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நடைபெறும் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், தெருக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

தேசிய கலை மன்றத்தின் சமூக ஈடுபாட்டு துணை இயக்குநர் பேட்ரிக் தெரிவித்ததாவது, “சில கலைஞர்கள் இடைவெளியில் மற்றவர்களை தங்கள் இடத்தில் நிகழ்த்த அனுமதிக்க விரும்புகிறார்கள். சிலர் இணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.”

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஆர்ச்சர்ட் சாலையில் இரண்டு தற்காலிக நிகழ்ச்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இவை கிறிஸ்துமஸ் ஈவ் அன்று திறந்திருக்கும்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK