சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுனருக்கு பெண்ணால் கிடைத்த பதிலடி..!!!
சிங்கப்பூர்: ஹூவாங் ஜிக்சின் என்ற பெண் ஒரு நாள் காலை 7 6 மணிக்கு கடந்த மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனியார் கார் ஹெய்லிங் தளமான TADA வழியாக செல்ல ஒரு டாக்ஸியை அழைத்ததாக சேனல் 8 செய்திகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வழித்தடம்மானது அந்த பெண்ணின் வீட்டில் இருந்து அவரது மகளின் பள்ளிக்கு செல்லும் வழியாகும்.
பிக்கப் இடம் தெளிவாக தெரிவிக்கப்படாததால் பெண் ஓட்டுனர் தொலைபேசியில் பொறுமை இழந்துள்ளார்.
குடியிருப்புப் பகுதியை நெருங்கும்போது ஓட்டுநர் கணினியால் குறிப்பிடப்பட்ட இடத்தில் நிற்காமல் வாயிலில் நிறுத்தினார். இது இருவருக்கும் இடையே விரும்பத்தகாத வாக்குவாதத்தை மேலும் ஏற்படுத்தியது. இறக்கிவிட்டு, பிறகு எதிர்பாராத விதமாக ஓட்டுநர் பொறுமையை இழந்து, காரிலிருந்து இறங்கி அவளை துரத்தியது மட்டுமல்லாமல் திட்டி மிரட்டும் சைகைகளையும் செய்துள்ளார்.
இதனால் பயணியாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். விசாரணையின் போது பின்வருமாறு நடந்து கொண்டதாக கூறினார்
சவாரி முழுவதும் ஓட்டுனர் மிகவும் கோபமாக இருந்தார் திடீரென என் மகள் சீட் பெல்ட் அணியவில்லை என்று குற்றம் சாட்டியதாக அந்த பயணியர் தெரிவித்தார். நான் அவளுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை எனவும் அதனால் நான் அவளிடம் அதிகம் பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஓட்டுநர் நடந்து கொண்ட செயலால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவல்துறை விசாரணைக்கு பிறகு ஓட்டுநர் ஆக்ரோஷமான நடத்தை ஈடுபட்ட காரணத்தினால் உடனடியாக இடை நீக்கம் செய்யப்பட்டார்.
பயணிகளின் காத்திருப்பு நேரத்திற்கு தளம் பணத்தை திருப்பி தந்துள்ளது ஒவ்வொரு பயணமும் பாதுகாப்பானது நியாயமானது மற்றும் நம்பகமானது என்பதை உறுதி செய்வதில் TADA உறுதியாக உள்ளது என தெரிவித்தது.
பயணிகளின் அனைத்து கருத்துக்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் தடா தெரிவித்துள்ளது.