குழந்தை பராமரிப்பு பள்ளியில் நடந்த அச்சுறுத்தல்..!! தண்டனை கிடைத்ததா..??
சிங்கப்பூரில் உள்ள குழந்தை பராமரிப்பு பள்ளியில் வார நாட்களில் காலை ஏழு மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சுமார் 12 முதல் 13 சிறார்கள் பள்ளி மாணவர்களை கொண்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதை கவனத்தில் கொள்வதே ஒரு பெண்ணினுடைய முக்கிய பொறுப்பாக இருந்தது. இதில் அந்தப் பெண் மூன்று குழந்தைகளின் குறும்புத்தனத்தை கவனித்ததும் கோபமடைந்து அவர்களை துன்புறுத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஒரு பெற்றோர் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய பெண்ணின் நடத்தையால் குழந்தை பள்ளிக்கு வர அச்சப்படுவதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆதாரத்திற்காக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய நிறுவனத்தின் ஊழியர்கள் காவல்துறையை அழைத்துள்ளனர்.
இந்த சம்பவம் ஆனது கடந்த வருடம்(2024) ஜூலை 25ஆம் தேதி நடந்தது.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூன்று பேரும் ஐந்து வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் நான்கு வயது சிறுமி ஒருவர் அவர்.
காவல் துறை விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் 35 வயது பணியாளரான அந்தப் பெண்ணை ஆஜர் படுத்தினர்.
மூன்று சிறார்களை துன்புறுத்திய சம்பவத்திற்காக குழந்தை பராமரிப்பு நிலையத்தின் முன்னாள் ஊழியருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, மேலும் குழந்தைகளை துன்புறுத்திய அந்தப் பெண்ணினுடைய அடையாளத்தையும் குற்றம் நடந்த இடத்தையும் வெளியிடக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.