சிங்கப்பூர் பாரில் நடந்த விபரீதம்..!! என்ன காரணம்..??
சிங்கப்பூரில் நேற்று (09/12/2025) இரவு 10:42 மணியளவில் பாசீர் ரிசில் என்ற இடத்தில் உள்ள டவுன்டவுன் கிழக்கில் இருக்கும் E அவென்யூ ஷாப்பிங் மாலில் ஒரு பார் உள்ளது.
அங்கு சென்ற ஒரு ஆண் வாடிக்கையாளர் மினரல் வாட்டர் வாங்கிய பிறகு பில்லர் பணத்தை வசூலிக்க சென்ற போது விலை அதிகமாக உள்ளது என பார் ஊழியரை தரையில் விழும் அளவிற்கு உதைத்து தாக்கியுள்ளார்.
மினரல் வாட்டர் பாட்டிலின் விலை $2.50 ஆனால் அவர் தவறுதலாக $0.20 என நினைத்து கடை ஊழியரை தாக்கல் தொடங்கியுள்ளார்.
பாரில் வேலை பார்த்த மற்றொரு ஊழியர் கூறியது: ஆரம்பத்தில் இது ஒரு வாய்மொழி கேலியாக ஆரம்பித்து பின்னர் அடிக்கும் அளவிற்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
வாடிக்கையாளர் தாக்கிய ஊழியர் மிகவும் ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க அழைத்துச் செல்லப்பட்டார். காவல்துறையினர் புகார் அளித்ததின் பேரில் வந்தபோது அவரை கைது செய்ய முற்படவில்லை.
தற்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆண்டு ஊழியர் சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் மேலும் மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாடிக்கையாளரால் இந்த பார் மட்டுமல்லாது, மற்ற பார்களிலும் இவரால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
மற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதற்காக தாக்கிய வாடிக்கையாளர் அதன் எந்த பார்வையிலும் நுழைவதை தடை செய்ய இன்ஸ்டாகிராமில் இந்த பார் வாடிக்கையாளர் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.