சிங்கப்பூரில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கடத்தல் சம்பவங்கள்..!!!

சிங்கப்பூரில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கடத்தல் சம்பவங்கள்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஒரே நாளில் நடைபெற்ற இரண்டு தனித்தனி சோதனைகளில், குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மொத்தம் 2,600க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்தது.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 19 மற்றும் 21 வயதுடைய இரண்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 15ஆம் தேதி காலை 8.40 மணியளவில்,உளவுத்துறை தகவலின் அடிப்படையில்,மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு வேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சோதனையின்போது மின் சாதனங்கள் மற்றும் கம்பிகள் அடங்கிய ஒரு பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இ-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் சோதனை இட்டதில் கதவு பேனல்களில் மறைக்கப்பட்டிருந்த 1,600க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே நாளில் மாலை 7.50 மணியளவில், மற்றொரு மலேசிய கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் அன்றாடப் பொருட்களின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 1,000 இ-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ICA தெரிவித்துள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK