செராங்கூன் சாலையில் இரண்டு டாக்ஸிகள் மோதி விபத்து..!! என்ன நடந்தது..??

செராங்கூன் சாலையில் இரண்டு டாக்ஸிகள் மோதி விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மேல் செராங்கூன் சாலைப் பகுதியில் இரண்டு டாக்சிகள் மோதிக்கொண்டன.

இச்சம்பவம் செங்காங் கிழக்கு நெடுஞ்சாலை நோக்கி மேல் செராங்கூன் சாலையில் நேற்று(21.11.15) அதிகாலை 3:05 மணியளவில் ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 73 வயது டாக்ஸி ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 53 வயது மற்றொரு ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் செங்காங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டிக்டோக் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில், ComfortDelGro டாக்ஸி மற்றும் Trans-Cab டாக்ஸி மீடியனில் எதிர் பாதையில் நிற்கும் காட்சிகள் தெரிகின்றது. மேலும் இந்த வீடியோவில், ஒரு வயதான டாக்ஸி ஓட்டுநர், ஓட்டுநர் இருக்கையில் வலியால் துடிப்பது தெரிகிறது.

ComfortDelGro நிறுவனத்தின் தகவலின்படி, ஒரு வாகனம் ComfortDelGro டாக்ஸி மீது மோதியதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் அல்லது பயணி இருவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும்,நிறுவனம் விசாரணையில் அதிகாரிகளுக்கு உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK