செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!!
செலேட்டர் விரைவு சாலையில் ஒரு வெள்ளை மினிவேன் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் சாலையின் நடுப்பகுதிக்கு முன்னே திடீரென நின்று தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்த வீடியோ பதிவை ஓஹனாஸ்யகில்லா6520 என்ற இணையவாசி நேற்று (ஜூன் 7) யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் தீப்பிடித்த இடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவதை காண முடிகிறது.
சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் இந்த தீ விபத்து குறித்த கூறியதாவது: அப்பர் தாம்சன் சாலை வெளியேறும் வழிக்கு முன்பாக புக்கிட் திமா விரைவு சாலையை நோக்கிய சிலேட்டார் விரைவு சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக நேற்று (ஜூன் 7) பிற்பகல் சுமார் 2:45 மணி அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தீ விபத்து குறித்த விவரம் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு லாரி தீப்பிழம்புகளால் சூழப்பட்டது தெரிய வந்ததை அடுத்த தீயணைப்பு வீரர்கள் நீர் பீய்ச்சி அடிக்கும் குழாய்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.