அதிவேகத்தில் கார் ஓட்டி பயணிகளை கொன்ற ஓட்டுநருக்கு இன்று தீர்ப்பு..!!!

அதிவேகத்தில் கார் ஓட்டி பயணிகளை கொன்ற ஓட்டுநருக்கு இன்று தீர்ப்பு..!!!

சிங்கப்பூர்: மத்திய விரைவு சாலையில் இருந்து ஒரு ஸ்லிப் சாலையில் ஆகஸ்ட் 11, 2023 அன்று அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்று மரத்தில் மோதிய பயங்கர விபத்து நடந்தது.

கார் பலமாக மரத்தில் மோதியதால் இரண்டாகப் பிளந்தது. மேலும் காரில் இறந்த பயணிகளில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரின் வேகத்தை மணிக்கு 116 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதனால் கார் செயல்பாட்டை இழந்து அவர் மரத்தில் மோதியுள்ளார்.

கார் மரத்தில் இடித்த வேகத்தில் இரண்டாக பிளந்தது. விபத்தின் போது காரை இயக்கிய ஓட்டுநர் 28 வயது ஓங் வெய் லொங் ஆவார்.

இந்த கார் விபத்தில் உயிரிழந்த இருவர் ஓங்கின் நண்பரான திரு டான் பிங் சுவானும் டானின் காதலி திருவாட்டி லிம் சின் ரோங் ஷேன்னனும் ஆவர்.

திருடன் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து வட்டார் மற்றும் அவரின் காதலி கடுமையான காயங்களுடன் சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த மாதம் (ஆகஸ்ட்) 19ஆம் தேதி மூளைச் சாவடைந்து உயிரிழந்தார்.

திருவாட்டில் இறந்த பிறகு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ஓட்டுனரான ஓங்கும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர்) 4-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதிவேகத்தில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக ஓட்டுனரான ஓங்கிற்கு இரண்டு ஆண்டுகள சிறை தண்டனை மற்றும் வாகனம் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan