எச்சரிக்கை: Special Voucher தருவதாக புதிய மோசடி.!!
அன்னையர் தினம் வருவதை முன்னிட்டு பரிசு சீட்டுகளுக்கு நிகராக தள்ளுபடி பல்பொருள் அங்காடியாக தற்போது இணையவழி கணக்கெடுப்புகளை மோசடிக்காரர்கள் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து Fair Price தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட தகவல் ஆனது, சமீபத்திய இணைய வழி கணக்கெடுப்பு மோசடிகள் குறித்து இன்று (ஏப்ரல் 24) பொதுமக்கள் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு போல இணையதளத்தில் கேள்வித்தாள் கணக்கெடுப்பை நடத்தி கேள்வித்தாளை பூர்த்தி செய்யும் ஒவ்வொருவருக்கும் $300 என்ற மதிப்புள்ள பரிசு சான்றிதழ் வழங்கப்படும் என மோசடிக்காரர்கள் ஒரு பல்பொருள் அங்காடி அங்காடி வழங்குவது போல போலியாக ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த போலி இணையதளம் அந்த நிகழ்வு அன்னையர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ஒரு விளம்பர நடவடிக்கை என பதிவிட்டு இருந்தது.
இந்த மோசடி செய்திகள் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் போன்ற தளங்களில் பரவி பயணர்களை போல இணையதளங்களுக்குள் உள்நுழைய வழிநடத்துகின்றன.
இந்த செய்தி உண்மையான Fair Price மூலமாக வெளிவிடப்படவில்லை எனவும் பொதுமக்கள் இது தொடர்பான எந்த ஒரு இணப்புகளையும் கொடுக்கவும் அல்லது எந்த ஒரு கேள்வியையும் பூர்த்தி செய்ய வேண்டாம் எனவும் Fair Price அங்காடி தெரிவித்துள்ளது.
அனைத்து சலுகைகளும் Fair Price குரூப் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
Fair Price, கேள்வித்தாள்கள் செய்திகள் அல்லது மூன்றாம் தரப்பு இணைப்புகள் மூலம் தனிப்பட்ட தரவுகள் உள் நுழைவு தகவல்கள் அல்லது இனி தகவல்கள் எதுவும் கேட்கப்பட மாட்டாது.
சலுகைகளையோ அல்லது சமீபத்திய செய்திகளையோ நீங்கள் சரிபார்க்க விரும்பினால் Fair Price இன் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.