இந்த விலை உயர்வு குறித்த முக்கிய விவரங்கள் : 👉முந்தைய காலாண்டில் காணப்பட்ட 0.6% விலை உயர்வை விட , இந்த காலாண்டில் விலை அதிகரிப்பு வேகம் (0.9%) எடுத்துள்ளது.
👉நிலம் சாரா சொத்துக்கள் (Non-land Properties) 1.3% விலை வியர்வை கண்டு, சந்தை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
👉புதிய திட்டங்களுக்கான (Pinery Residence, Rivelle Tampines) வலுவான விற்பனை காரணமாக ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 0.3% உயர்வை காட்டிலும் இந்த தரவு அதிகமாக உள்ளது..
அடுத்த சில ஆண்டுகளில், ஏறத்தாழ 55,800 தனியார் குடியிருப்பு அலகுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
பேரியல் பொருளாதார கண்ணோட்டம் மேலும் நிச்சயமமற்றதாக மாறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குடும்பங்கள் சொத்து வாங்கும்போதும், வீட்டு கடன்களுக்கு விண்ணப்பிக்கும் போதும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த காலண்டில் வீட்டு விலைகள் 0.9% உயர்ந்த நிலையில் அரசு வீடமைப்பு வாரியம் (HDB) மறுவிற்பனை விலைகள் 0.1% சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.