சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை பதிவு…!!

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை பதிவு...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சுற்றுலா பொருட்களை அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம்தான் வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், லிம் யி ஷூன் மற்றும் பயண நிறுவனங்கள் ஐ-டிராவல், லைக்டிராவல் ஆகியவை பொதுமக்களுக்கு பயண பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளன.ஆனால் அவை அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா வாரியம் இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளது என்றும், இந்த விதிமீறல்களை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், மீறுபவர்கள் மீது உடனடி அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் முறையாக பதிவு செய்யாமல் பயண நிறுவனங்களை நடத்துபவர்கள் $25,000 வரை அபராதம் அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK