ரிவர் வேலி பகுதியில் வருங்காலத்தில் டிமாண்ட் அதிகரிக்குமா..!!!

ரிவர் வேலி பகுதியில் வருங்காலத்தில் டிமாண்ட் அதிகரிக்குமா..!!!

சிங்கப்பூர்:ரிவர் வேலி பகுதியில் அமைந்துள்ள “ஜியோன் கிராண்ட்” குடியிருப்பு திட்டம் கடந்த இரண்டு நாட்களில் 84% யூனிட்கள் விற்று,ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனையை படைத்துள்ளது.

சிட்டி டெவலப்மென்ட்ஸ்(CDL) மற்றும் மிட்சுய்
ஃபுடோசன் இணைந்து உருவாக்கிய இந்த திட்டம், 706 யூனிட்களில் 590 யூனிட்களை சதுர அடிக்கு சராசரியாக S$3,050 விலையில் விற்றுள்ளன.

வாங்குபவர்களில் 84% சிங்கப்பூரர்கள், மீதமுள்ளவர்கள் சீனா, இந்தியா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.

யூனிட்களின் விலை S$1.298 மில்லியனில் தொடங்குகிறது. அதில் இரண்டு பென்ட்ஹவுஸ்களில் ஒன்றானது S$10 மில்லியனுக்கும் மேலாக விற்றுள்ளது.

 


“சந்தையின் நம்பிக்கை எங்கள் வெற்றியை உறுதிப்படுத்துகிறது” என CDL தலைமை நிர்வாக அதிகாரி குவோ யிஷி தெரிவித்தார்.

ரிவர் வேலி பகுதியில் உள்ள குடியிருப்பு சந்தை, இடம், வசதிகள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் போன்ற காரணிகளால், வருங்காலத்தில் டிமாண்ட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan