ஜுவல் சாங்கியில் லேடி எம் திறக்கப்படுமா?

ஜுவல் சாங்கியில் லேடி எம் திறக்கப்படுமா?

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனது கடைகளை முன்பு மூடிய பிரபல அமெரிக்க இனிப்பு பிராண்டான லேடி எம், எதிர்காலத்தில் நேரடி மேலாண்மை (Direct Management) மாதிரிக்கு மாறி, உள்ளூர் சந்தைக்கு மீண்டும் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து லேடி எம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கென் ரோமானிஸ், சிங்கப்பூரில் நடைமுறையில் இருந்த நீண்டகால உரிமையாளர் (franchise) ஒப்பந்தம் கடந்த 2025 டிசம்பர் 11ஆம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக கூறினார்.

இதையடுத்து, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் பிராண்டின் நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், நிறுவனம் படிப்படியாக நேரடி மேலாண்மை முறைக்கு மாற உள்ளதாக அவர் விளக்கினார்.

இந்த புதிய மேலாண்மை முறை மூலம், வாடிக்கையாளர்களுக்கான ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதோடு, தயாரிப்புகளின் தரமும் சேவை நிலையும் லேடி எம் நிறுவனத்தின் உலகளாவிய முதன்மை கடைகளின் தரத்திற்கு இணையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் செயல்படப்படும் என்றும் ரோமானிஸ் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் மீண்டும் கடைகள் தொடங்குவதற்கான சாத்தியமான இடங்களை நிறுவனம் தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும்,சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஜுவல் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இதில் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.