திருட்டு சம்பவத்தில் சிக்கிய பெண் சாங்கி விமான நிலையத்தில் கைது..!!

திருட்டு சம்பவத்தில் சிக்கிய பெண் சாங்கி விமான நிலையத்தில் கைது..!!

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் ஊட்டச்சத்துப் பையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூர் திரும்பிய போது ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு மே மாதம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்தப் பெண் கார்டியன் என்ற கடையிலிருந்து ஒரு பொட்டலத்தை திருடியதாக சந்தேகிக்கப்பட்டது.

திருடிய பொருளின் மதிப்பானது சுமார் 500 வெள்ளி ஆகும். காவல்துறையினர் திருடிய பெண்ணின் அடையாளத்தை வைத்து தேடிய போது அவர் சிங்கப்பூரிலிருந்து சென்று விட்டார் என தெரியவந்தது.

51 வயது நிரம்பிய அந்தப் பெண் இந்த மாதம் நவம்பர் 2ஆம் தேதி சிங்கப்பூருக்கு திரும்பினார்.

அப்போது அவர் சாங்கி விமான நிலையத்தின் இடைவழி பகுதியில் வேறொரு விமானத்திற்காக காத்திருந்தபொழுது காவல்துறையினர் அடையாளம் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த அந்த பெண்ணை நாளை (நவம்பர் 12) நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்த உள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்படும்போது இவருக்கு ஏழு வருடங்கள் சிறை தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.