மது போதையால் பொது இடங்களில் கைதான இளைஞர்கள்..!!

மது போதையால் பொது இடங்களில் கைதான இளைஞர்கள்..!!

சிங்கப்பூர்: ரோச்சூர் கால்வாய் சாலை மற்றும் லிட்டில் இந்தியாவில் நேற்று (11/09/2025) 18 பொது பொழுதுபோக்கு இடங்களுக்கு மத்திய காவல் நிலையமும், குற்றப் புலனாய்வு துறையின் ரகசிய சங்க பிரிவும் கிட்டத்தட்ட 100 பேரை விசாரணையில் நடத்தியதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07/09/2025) அதிகாலை 4 மணி அளவில் வன வணிக மையத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் ஒரு இரவு விடுதியில் ஆயுதங்களுடன் சண்டை இட்டுள்ளதாக சந்தேகித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை (10/09/2025) இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு போலீசார் வன வணிக மையத்திற்கு சென்று பெரிய அளவிலான சோதனையில் ஈடுபட்டனர்.

ரகசிய சமூக நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதாக சந்தேகித்து 24 முதல் 44 வயதிற்கு உட்பட்ட நான்கு ஆண்களும் 22 வயதை உடைய ஒருவர் பொது ஊழியர்களை அவமதித்து காயப்படுத்திய குற்றத்திற்காகவும், அரசு ஊழியர்கள் தங்களுடைய கடமைகளை செய்வதை தடுத்ததற்காகவும் சந்தேகித்து கைது செய்தனர்.

40 வயதுடைய நபர் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகித்த அவர் மத்திய போதை பொருள் தடுப்பு பணியகத்தால் விசாரிக்கப்பட்டார்.

38 வயதை சேர்ந்த நபர் மின் சிகரெட் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்து சுகாதார அறிவியல் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டார்.

ஐந்து மின் சிகரெட் மற்றும் தொடர்புடைய கூறுகளை போலீசார் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். மது பதையில் இருந்ததாக சந்தேகித்த 16 வயது சிறுமி போலியான மின்னணு பதிவுகளை பயன்படுத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த குற்றங்களை ஆய்வு செய்ய சேனல் 8 நியூஸின் நிருபர் ஒருவர் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காவல்துறையினருடன் சேர்ந்து இன்று(12/09/2025) காலை 10 மணிக்கு வன வணிக மையத்திற்கு வந்து திடீர் ஆய்வுகளை மேற்கொள்வதை பார்வையிட்டுள்ளார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.