சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகள் வழியாக எட்டோமிடேட் என்ற ஆபத்தான போதைப்பொருள் வேகமாக பரவி வருகிறது. இது “ஜாம்பி கார்ட்ரிட்ஜ்” என அழைக்கப்படுகிறது. சமீபத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட 100 இ-சிகரெட்டுகளில் 30-க்கும் மேல் ஜாம்பி கார்ட்ரிட்ஜ்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மாயத் தோற்றம், உடல் உறுப்பு சேதம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்த மருந்து தற்போது தடுக்கப்பட்ட போதை பொருள் என வகைப்படுத்தப்படவுள்ளது. இதை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும், விற்பதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக மாறும் என சுகாதார அமைச்சர் ஓங் யே குங் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள், உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து சட்டமாறுதல்களுடன் விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்கிடையே, பொதுமக்கள் இ-சிகரெட் தொடர்பான புகார்களை அளிக்கக்கூடிய ஹாட்லைன் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஜாம்பி கார்ட்ரிட்ஜ் போன்ற சிகரெட்டுகளை உடனே விலக்குமாறும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.