சிங்கப்பூரில் 15 வயது மலேசியச் சிறுவன் கைது..!!

சிங்கப்பூரில் 15 வயது மலேசியச் சிறுவன் கைது..!!

சிங்கப்பூர்: ஏப்ரல் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நிரந்தர வசிப்பிட விண்ணப்பத்தின் மூலம் ஏற்பட்ட மோசடிகள் தொடர்புடைய இரண்டு புகார்கள் வந்ததாக காவல்துறையினர் நேற்று (ஏப்ரல் 21) மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் மோசடிக்காரர்களின் சொல்லிற்கு இணங்க அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் முறையே $7,500 மற்றும் $2,200 பணத்தை கொடுத்துள்ளதாக ஏமாந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்திடம் விசாரித்த போது தான் தங்கள் நிரந்தர வசிப்பிட விண்ணப்பத்தின் மூலமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்கள்.

மேலும் விரிவான விசாரணைக்கு பிறகு, பெடொக் காவல்துறை சிறுவனின் அடையாளத்தை உறுதி செய்தும் நேற்று (ஏப்ரல் 21) அவனை கைது செய்தது.

முதற்கட்ட விசாரணையின் போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த சிறுவனுக்கு பணத்தை சேகரித்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளதாக தெரியவந்தது அந்த சிறுவன் இது போன்ற மற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.

இது போன்ற குற்ற செயல் மூலம் கிடைத்த வருமானத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஏமாற்றுக்காரர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட அந்த இளைஞர் மீது இன்று (ஏப்ரல் 22) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்தச் சிறுவனுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும் பொது மக்களுக்கு காவல்துறை வலியுறுத்தியது: அறிமுகம் இல்லாத நபர்களிடமோ அல்லது அடையாளம் சரி பார்க்கப்படாத நபர்களிடமோ பணம் அல்லது மதிப்புமிக்க பொருட்களை கொடுக்க வேண்டாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK