சிங்கப்பூரில் பிடிபட்ட 18 ஓட்டுநர்கள்..!!

சிங்கப்பூரில் பிடிபட்ட 18 ஓட்டுநர்கள்..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏப்ரல் 3ஆம் தேதிக்கும் 5ஆம் தேதிக்கும் இடையே கூடுதல் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டது.

ஓட்டுனர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதையும் போக்குவரத்து குற்றங்கள் புரிவதையும் தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் போது 18 ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து சென்ற ஓட்டுநர்களில் 15 பேர் சிக்கியுள்ளனர். மீதமுள்ள மூவர் சிங்கப்பூருக்குள் நுழையும் பாதையில் சிக்கினர்.

ஓட்டுநர்கள் செய்த தவறுகள்:
👉 வாகனத்தை சட்ட விரோதமாக வலப்பக்கம் திருப்பியது
👉 ஆபத்து அல்லது இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடத்தில் வாகனத்தை நிறுத்தியது
👉 இரட்டை வெள்ளை கோட்டை மீறியது
👉 வரிசையில் முந்தியடித்து சென்றதால்

வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டிய நான்கு பேருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

மொத்தமாக 15 ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK