சிங்கப்பூரில் 34 வயது ஆடவர் கைது..!! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!!
சிங்கப்பூர்: தெலோக் பிளாங்கா க்ரசென்டில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்து காவல்துறை நேற்று(ஏப்ரல் 8) அறிக்கை வெளியிட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியின் கதவு மிதிவண்டி பூட்டு மூலம் பூட்டப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) மாலை 5:30 மணி அளவில் தங்களுக்கு புகார் வந்ததாக காவல்துறையினர் அறிக்கையில் பதிவிட்டுள்ளனர்.
காவல்துறை விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததை தொடர்ந்து மத்திய காவல் நிலைய அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்த மூன்று மணி நேரத்திற்குள் சந்தேகப்பட்ட நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
விசாரணையின் போது கந்துவட்டிக்காரர்களால் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்து மேலும் இரண்டு மிதிவண்டி பூட்டுகளை கையகப்படுத்தினர். இந்த பூட்டுகளும் குற்ற நிகழ்வு இடத்திலிருந்து மீட்கப்பட்ட பூட்டுகளும் இந்த வழக்கின் முக்கிய சான்றுகளாக பட்டியலிடப்பட்டுள்ளது.
கைது செய்த நபருக்கு 34 வயது என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக கடன் வழங்குதல் மற்றும் தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளை செய்த குற்றத்திற்காக கைது செய்த நபர் மீது இன்று (ஏப்ரல் 9) பனகடன் வழங்குவோர் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
சட்டவிரோத பனக்கடன் தொந்தரவு வழக்கில் குற்றவாளி என்று நிரூபணம் ஆனால், முதல் முறை குற்றவாளியாக இருந்தால் அவர்களுக்கு $5,000 முதல் $50,000 வரை அபராதம் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஆறு பிரம்படிகள் விதிக்கப்படும்.
இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை சற்றும் காவல்துறையினர் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் பிறரின் சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்தியும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் பொது பாதுகாப்பு மற்றும் முழுங்கிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நடதையும் சட்டப்படி கடமையாக கையாள படம் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.
சட்ட விரோதமாக கடன் வழங்குபவர்களிடமிருந்து சற்று விலகி இருக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபடும்படி பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தாலும் தகவல் தெரிந்தாலும் அவர்களைப் பற்றி புகார் அளிக்க “999” என்ற காவல்துறை உதவி என்னை தொடர்பு கொள்ளலாம்.