சிங்கப்பூரில் 61 வயது நபருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??
2016 ஆம் ஆண்டில், 61 வயதைச் சேர்ந்த லோ கொக் பெங், தனது நண்பர் ஒருவரின் அறிமுகத்தின் மூலமாக 50 வயதான இந்தோனேசிய பணிப்பெண்ணான கொமரியாவை சந்தித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் பணிப்பெண் சிங்கப்பூரில் பணி அனுமதியுடன் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் தொடர்ந்தது. 2024 ஆம் ஆண்டு அவர்கள் படாமில் திருமணம் செய்து கொண்டனர்.
மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். பணிப்பெண்ணாக வேலை பார்த்த அவரும் திருமணம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க தவறியதால் பணி அனுமதி விதிமுறைகளை மீறி இருக்கிறார்.
முதல் மனைவியிடம் இரண்டாவது திருமணம் செய்த தகவலை தெரிவிக்கவில்லை. சிங்கப்பூருக்கு திரும்பிய பிறகு திரு லோ தனது முதல் மனைவியுடன் வசிப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த குற்றங்கள் இந்த ஆண்டு 2026 ஜனவரி மாதம் ஒரு ரகசிய தகவலின் மூலம் மனிதவள அமைச்சகத்திற்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்து, குற்றம் சாட்டப்பட்ட வரும் பணிப்பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதும் இருதார மனம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அந்த பணிப்பெண் மீது பணி அனுமதி விதிமுறைகளை மீறியதற்காக மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த விவரங்களின்படியும் பிரதிவாதியும் அவரது 55 வயது மனைவியும் 1992 இல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
பணிப்பெண்ணும் நேற்று (ஏப்ரல் 24) அவரது குற்றத்தை ஒப்பு கொண்டிருக்கிறார் ஆனால் அவரை திருமணம் செய்த போது பிரதிவாதிக்க ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது பற்றி தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் அவருக்கு அது எப்போதுமே தெரிந்திருந்தது என அரசு தரப்பு வாதிட்டுள்ளது.
உண்மை நிலையை தெளிவுபடுத்துவதற்காக அவரது வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்தாய்வுக்கு மாற்றப்பட்டது.
இறுதியாக தனது மனைவிக்கு துரோகம் செய்து 50 வயது பணிப்பெண்ணுடன் திருமணம் செய்த குற்றத்தை லோ நேற்று (ஏப்ரல் 24) மாநில நீதிமன்றங்களில் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால், இவருக்கு இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இருதார மணத்திற்கான அதிகபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.