பீஷான் – தோ பாயோ GRC நாடாளுமன்ற உறுப்பினர் சான் சே வான் நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) முகநூல் பக்கத்தில் ஒரு புதிய காணொளியை பகிர்ந்து உள்ளார்.
பீஷான் – தோ பாயோ நகர மன்றம் அப்பகுதியில் இருக்கும் மரங்களை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு ட்ரோன்களை பயன்படுத்தும் ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினரான சக்தி ஆண்டி சுபாத்துடன் இணைந்து தோன்றிய ஒரு காணொளியில் அந்த மாவட்டத்தில் நகர சபை 18,000-க்கும் மேற்பட்ட மரங்களை நிர்வகித்து வருவதாகவும் சான் கூறினார்.
ஆரோக்கியமாக உள்ள மரங்களுக்குள்ளும் பிரச்சனை இருக்கலாம் எனவே தாங்கள் ஒரு சிறந்த வழியை கண்டறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த காணொளியில் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்கும் நிறுவனமான விஷுவல்வெர்க்சின் பணியாளர்கள், ஹைபெர்ஸ்பெக்ட்ரல் கேமரா பொருத்தப்பட்ட AI மூலம் இயங்குகின்ற டிரோன் ஒன்றாள் வெறும் கண்ணுக்கு தெரியாத பிரச்சினைகளை கண்டறிய இயலும் என்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதன் பிறகு, ITE காலேஜ் ஈஸ்ட் இன் தோட்டக்கலை மேலாண்மை மற்றும் வடிவமைப்பு பாட பிரிவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் ஒரு பெரிய மரத்தை ஆய்வு செய்யும் செயல்முறையை செய்து காட்டினார்கள்.
இந்த ட்ரோன்கள் மரங்களை ஆய்வு செய்வதற்கு எனவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவை மரங்களின் மீது கவனம் செலுத்தும் என்றும் சென் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நமது சமூகங்களை பசுமையாக பாதுகாப்பாக வைத்திருக்கவும் தொழில்நுட்பமும் இளம் திறமையாளர்களும் இணைந்து செயல்படுவதை காண்கையில் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு (2026) நடைபெற்ற Govlnsinder புத்தாக்க விழாவில் மூன் ஷாட் விருதுக்கான 5 வெற்றியாளர்களில் ஒன்றாக இந்த புதிய திட்டம் தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.