இரவு நேரத்தில் விபரீதமாக முடிந்த PMD பயணம்..!!

இரவு நேரத்தில் விபரீதமாக முடிந்த PMD பயணம்..!!

சிங்கப்பூர்: யிஷுன் பகுதியில், தனிநபர் நடமாட்ட சாதனம் (PMD) ஆபத்தான முறையில் சந்திப்பைக் கடந்த போது ஏற்பட்ட விபத்தில், அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் காருடன் மோதியதில் சாலையில் விழுந்தனர்.

இந்த சம்பவம் 28ஆம் தேதி இரவு சுமார் 11.10 மணியளவில், யிஷுன் ரிங் ரோடு மற்றும் யிஷுன் அவென்யூ 2 சந்திப்பில் நிகழ்ந்தது.

ஒரு PMD மற்றும் ஒரு கார் இந்த விபத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SG Road Vigilante வெளியிட்ட வீடியோ காட்சிகளில், இரண்டு இளைஞர்கள் ஒரே PMD-யில் பயணித்து வேகமாக சந்திப்பைக் கடக்க முயன்ற போது, எதிரே வந்த கார் சரியான நேரத்தில் பிரேக் போட முடியாமல் நேரடியாக மோதியதை காண முடிகிறது.

மோதலின் தாக்கம் மிக வலுவாக இருந்ததால், இருவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.

விபத்துக்குப் பிறகு அவர்கள் உடனடியாக எழுந்திருக்க முடியாமல், தரையில் சுருண்டு விழுந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள்,இருவருக்கும் உதவி செய்து பாதுகாப்பாக உட்கார வைத்தனர்.

காவல்துறை தரப்பில், 13 வயதான ஓட்டுநரும், அதே வயதுடைய பயணியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK