பரபரப்பு..!!வானவேடிக்கை நடுவே திடீரென எழுந்த புகை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புத்தாண்டு கவுண்ட்டவுன் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், இன்று (01.01.26) அதிகாலை Our Tampines Hub கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மேல் தளத்திலிருந்து அடர்ந்த புகையும் தீப்பிழம்புகளும் எழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இணையவாசி சென் சுவான்யு சமூக ஊடகத்தில் பதிவிட்ட காணொளியில், தெம்பனிஸ் பிளேஸின் கூரையிலிருந்து தீ மற்றும் கரும்புகை கிளம்புவது தெளிவாக காணப்பட்டது.
அதில் குறைந்தது இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்ததும் பதிவாகியுள்ளது.
சென் சுவான்யு கூறுகையில், நள்ளிரவு 12:06 மணியளவில் வானவேடிக்கைகள் வெடித்துக் கொண்டிருந்தபோது, எதிரே உள்ள HDB அடுக்குமாடிகளில் இருந்து தெம்பனிஸ் Hub கூரையில் தீப்பிடித்ததை கண்டதாக தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து 12:30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சம்பவ நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி தொடர்ந்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களை மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை வெளியிட்ட தகவலின்படி, கட்டிடத்தின் கூரையில் உள்ள ஒரு சிறிய புல்வெளிப் பகுதியில் தீ ஏற்பட்டதாகவும், நீர் ஜெட்களை பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.