தெம்பனிஸில் சர்ச்சையை ஏற்படுத்திய ஐஸ்கிரீம் விற்பனை..!!!

தெம்பனிஸில் சர்ச்சையை ஏற்படுத்திய ஐஸ்கிரீம் விற்பனை..!!!

சிங்கப்பூர்: தெம்பனிஸில் சில குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஐஸ்கிரீம் விற்கும் டீனேஜர்கள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ள நிலையில், இது சட்டவிரோத வியாபாரம் என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த மாதம் தெம்பனிஸ் கிரீன்ஜெம் உள்ளிட்ட பகுதிகளில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களாகத் தோன்றும் இளைஞர்கள் வீடுகளின் கதவுகளைத் தட்டி ஐஸ்கிரீம் விற்பனை செய்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர் சந்தை விலையை விட அதிகமாக வசூலிப்பதாகவும், தொடர்ந்து மணி அடித்து தொந்தரவு செய்வதாகவும் புகார் கூறியுள்ளனர். சமூக அரட்டை குழுக்களில் பகிரப்பட்ட தகவல்களின்படி, ஒரு பெட்டி ஐஸ்கிரீம் S$ 30வரை விற்கப்பட்டதாகவும், விற்க முடியாவிட்டால் பெற்றோரிடம் இருந்து கண்டிப்பு கிடைக்கும் என சில இளைஞர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில குடியிருப்பாளர்கள் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த விற்பனையில் ஈடுபட்டதாகவும் கூறினர்.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்த சிங்கப்பூர் உணவு நிறுவனம், சுற்றுச்சூழல் பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் அனுமதி இல்லாமல் வீடு வீடாக உணவு விற்பனை செய்வது சட்டவிரோதம் என்றும், இது உணவுப் பாதுகாப்பு தொடர்பான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற விற்பனையாளர்கள் நடமாடுவதால், உணவில் சிக்கல் ஏற்பட்டால் அவர்களை கண்டுபிடிப்பது கடினம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அதே நேரத்தில், சில குடியிருப்பாளர்கள் இந்த இளைஞர்களிடம் அனுதாபம் காட்டியுள்ளனர்.

கூடுதல் பணம் சம்பாதிக்க முயற்சிப்பதாக நேர்மையாக கூறியதாகவும், வற்புறுத்தல் இல்லாமல் நடந்துகொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சிலர் விலை அதிகமாக இருந்தாலும், இளைஞர்களின் முயற்சியை மதித்து ஐஸ்கிரீம் வாங்கியதாக கூறினர்.

எனினும், பொதுமக்கள் உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே உணவை வாங்க வேண்டும் என்றும், எந்தவொரு சட்டவிரோத விற்பனை நடவடிக்கைகளையும் கண்டறிந்தால் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.