லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! காரணம்..???

லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! காரணம்..???

சிங்கப்பூர்: அல்ஜுனிட் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி எதிர்திசையில் லாரி ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஒருவர், அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை ஆத்திரத்துடன் உதைப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு புகார் கிடைத்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

SGRV Admin என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட டேஷ்கேம் காட்சிகளின்படி, இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (27.01.26)) காலை 10:35 மணியளவில் அல்ஜுனிட் அருகே உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் நடந்துள்ளது.

வீடியோவில், போக்குவரத்து விளக்கில் திடீரென ஒரு SF எக்ஸ்பிரஸ் லாரி போக்குவரத்துக்கு எதிராக சென்று, ஒரு வெள்ளை நிற செடான் காரை முந்திச் செல்கிறது.

அதன் பின்னர், இருண்ட நிற உடை அணிந்த நபர் ஒருவர் லாரியில் இருந்து இறங்கி, கோபத்துடன் கத்திக் கொண்டே அந்த காரின் கதவை உதைத்து தாக்குவது பதிவாகியுள்ளது.

மேலும் வெளியிடப்பட்ட மற்றொரு காணொளியில், அதே நபர் அல்ஜுனிட் அருகே உள்ள கல்லாங் வேயில் மீண்டும் அதே வெள்ளை நிற செடான் காரை வழிமறித்து நிறுத்தி, ஆத்திரமடைந்த நிலையில் காரை அடித்து உதைத்து தனது கோபத்தை வெளிப்படுத்துவது தெளிவாக காணப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK