KPE-யில் கோர விபத்து.!! ஒருவர் உயிரிழப்பு..!!

KPE-யில் கோர விபத்து.!! ஒருவர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று(02.02.26) மாலை நெரிசல் நேரத்தில்,கேலாங்-பயோ லெபார் விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தகவலின்படி, மாலை 6.30 மணியளவில்,தெம்பனிஸ் சாலை வெளியேறும் இடத்திற்கு முன்பாக, தெம்பனிஸ் விரைவுச்சாலை நோக்கிச் சென்ற கேலாங்-பயோ லெபார் விரைவுச்சாலையில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவப் பணியாளர்கள், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவித்தனர்.

காவல்துறை தகவலின்படி, உயிரிழந்தவர் 55 வயதுடைய ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆவார்.

தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் சென்ற போது, மோட்டார் சைக்கிள் சறுக்கியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை நம்புகிறது.

இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK