சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 18) மாலை ஜூரோங் டவுன் ஹால் சாலை பகுதியில் பெய்த கன மழையால் திடீரென வெள்ளத்தில் சாலை மூழ்கியது.
ஜூரோங் கிழக்குத் தெரு 11 முதல் கிழக்கு தெரு 12 வரை உள்ள சாலை பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொது பயன்பாட்டு வாரியம் ஆனது மாலை 5:51 மணி அளவில் சமூக ஊடகமான எக்ஸ் பதிவில் பதிவிட்டிருக்கிறது.
எனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சாலையை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் திடீர் வெள்ளம் தற்போது குறைந்துள்ளதாக பொது பயன்பாட்டு வாரியம் சரியாக மாலை 06: 05 மணி அளவில் அதனுடைய டெலிகிராமில் தெரிவித்திருக்கிறது.