சிங்கப்பூர் சோதனை சாவடியில் பயணிகள் கடந்தனர்?
ICA வெளியிட்ட அறிவிப்பு..!!
சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளை கடந்த ஆண்டான 2025 ஆம் ஆண்டில் சாதனை அளவில் கிட்டத்தட்ட 245 மில்லியன் பயணிகள் கடந்து சென்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது முந்தைய ஆண்டி பதிவான 230 மில்லியனை விடவும் கோவிட் 19 கிருமி பரவலுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் பதிவான 217.3 மில்லியனை விடவும் அதிகமாக பதிவாகியுள்ளது.
நான்கு பயணிகளில் மூன்று பேர் நிலச் சோதனை சாவடிகள் வழி சிங்கப்பூருக்குள் நுழைந்ததாக குடிநுழைவு சோதனை சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் பயணிகளின் எண்ணிக்கையானது அதிகமான தேதி 2025 டிசம்பர் 19ஆம் தேதி ஆகும். இந்த நாளில் நிலச் சோதனை சாவடி வழியாக கிட்டத்தட்ட 589,000 பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நிலச் சோதனை சாவடிகளில் கூடுதலாக 9.5% வாகனங்கள் குடிநுழைவை கடந்து சென்றுள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்கு ஆர்டிஎஸ் சேவையை பயன்படுத்தி செல்ல விரும்புகின்ற பயணிகள் QR குறியீட்டு முறையை பயன்படுத்திய கடந்து செல்வர் என்று ஆணையம் கூறியுள்ளது.
ஐசிஏ அறிமுகப்படுத்திய திட்டங்களால் சோதனை சாவடிகளில் இருந்து மேலும் விரைவாக சிறந்த முறையில் பயணிகள் கடைப்பிதழ் இல்லாமல் குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்ற முடிவதாக கூறியுள்ளது.