அதிர்ச்சி..!! ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் பயங்கர விபத்து..!!!
சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் நேற்று(01.03.26) காலை ஒரு MRT பேருந்து, ஒரு லாரியை பின்னால் மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டார், மேலும் மற்றொரு வயதான பயணி காயமடைந்தார்.
சிங்கப்பூர் காவல் படை நேற்று காலை 10:10 மணியளவில் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ஈஸ்ட் கோஸ்ட் நோக்கிச் செல்லும் சாலையில் இந்த போக்குவரத்து விபத்து நிகழ்ந்தது என உறுதிப்படுத்தியுள்ளது.
சிவில் பாதுகாப்பு படையினர், பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கியவரை கண்டுபிடித்து, ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களின் மூலம் அவரை வெளியேற்றினர்.
பின்பு காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 74 வயது ஆண் ஓட்டுநர் மற்றும் 81 வயது பெண் பயணி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இணையதளத்தில் பரவி வரும் புகைப்படங்களின்படி,வழித்தடம் 10 இல் வந்த SBS டிரான்சிட் பேருந்து, ஒரு லாரியை பின்புறமாக மோதியதால், பேருந்தின் கண்ணாடி மற்றும் முன்பக்கப் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.
தற்போது 74 வயதான ஓட்டுநர் விசாரணைக்கு உதவி புரிந்து வருகிறார்.இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.