மார்ச் மாதத்தில் பள்ளி விடுமுறை நாட்கள் ஆரம்பம் ஆகிவிட்ட காரணத்தினால் உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் இருந்து புறப்படும் வாகனங்கள் மூலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் நீண்ட நேரங்கள் அதாவது ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகு பயணிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.
குறித்த தகவலை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் ஆனது இன்று (மார்ச் 14) காலை 8:07 மணியளவில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
எனவே பயணிகள் வழியில் செல்வதற்கு முன்பாக போக்குவரத்து நிலைமைகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Checkpoint.sg என்ற மொபைல் செயலியின் மூலமாக, உட்லேண்ஸ் சோதனை சாவடியில் இருந்து மலேசியாவின் ஜோகூர் பாருவிற்கு காலை 10:40 மணிக்கு புறப்பட கிட்டதட்ட 65 முதல் 95 நிமிடங்கள் ஆகிறது
துவாஸ் சோதனை சாவடியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலானது சற்று குறைவாகவும் அதோடு மலேசியாவை சென்றடைய அதிகபட்சமாக 30 நிமிடங்கள் மட்டுமே பயண நேரம் ஆகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.