இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!!

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!!

சிங்கப்பூரில் மார்ச் 13ஆம் தேதி டிக் டாக் பயனர் tinghao8888 என்ற கணக்கில் ஆபத்தான முறையில் உள்ள ஒரு வீடியோவானது பதிவிடப்பட்டிருந்தது.

அந்த வீடியோ பதிவில் ஒரு கனரக வாகனத்தின் டயர் ஒன்று சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உருண்டு செல்லும் காட்சியானது இடம்பெற்று இருந்தது.

அந்த டயர் நடுத்தரப்பின் ஓரமாக உருண்டு சென்று சாலையின் பாதுகாப்பு வேலியின் மீது விழுந்தது. இந்த நிகழ்வானது தான் ஐலண்ட் விரைவுச்சாலைக்கும் மற்றும் நெடுஞ்சாலை 17 சாலைக்கும் சந்திப்பில் நடந்துள்ளது.

இதுகுறித்து 8 வேர்ல்ட் நியூஸ் சேனலுக்கு வீடியோவை வெளியிட்ட பயனர் கூறியதாவது:
மார்ச் 13ஆம் தேதி மதியம் 1:40 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறினார். அந்த நேரத்தில் ஒரு காரினுடைய முன் பக்க பயணியாக இவர் அமர்ந்திருந்தார். இதனை கண்டதும் அவரது ஓட்டுநர் அந்த டயர் செல்லும் வழித்தடத்தை தவிர்ப்பதற்காக காரின் வேகத்தை குறைத்தார்.

இந்த வீடியோ பதிவானது 26,000 நடவைக்கு மேல் இணையத்தில் பார்க்கப்பட்டு வைரல் ஆகியுள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் இந்த டயர் உலகைச் சுற்றிவர போகிறது என்பதை உணர்த்தும் விதமாக இந்த வீடியோவிற்கு நகைச்சுவையாக தலைப்புகளை சேர்த்து பதிவிட்டுள்ளனர்.

பெரும்பாலான இணையவாசிகள் இந்த வீடியோ பதிவை பார்த்துவிட்டு இது மிகவும் ஆபத்தானது எனவும் ஓட்டுநர் சரிவர கவனிக்காததால் இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK