புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!!

புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர் டாலர் மதிப்பு..!!

சிங்கப்பூர் டாலரின் மதிப்பானது மலேசிய ரிங்கிட்கிற்கு எதிராக, ஒரு டாலருக்கு 3.12 என்ற மதிப்பில் அதிகரித்துள்ளது. 2 மாதங்களுக்கு மேலான காலத்தில் இதுவே அதிகபட்ச மதிப்பாகும்.

ஆன்லைன் அந்நிய செலாவணி கருவிகள் மற்றும் சேவைகள் நிறுவனமான xe.com இன் தகவல்களின் படி, நேற்று மார்ச் 29ஆம் தேதி இரவு 11.00 மணி அளவில், சிங்கப்பூர் டாலர் மலேசிய ரிங்க்டிற்கு எதிராக 3.12481 என்ற அளவில் உயர்ந்தது.

இந்த ஆண்டில் ஜனவரி 27ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிக அதிகமான மதிப்பு இதுவே ஆகும்.

இன்று (மார்ச் 30) நாணய விகிதத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டுள்ளது.உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:05 மணியளவில், மலேசிய ரிங்கிட்ருக்கு எதிராக சிங்கப்பூர் டாலரின் மதிப்பானது சற்றுக் குறைந்து காணப்பட்டது.

ஒரு சிங்கப்பூர் டாலருக்கு 3.12044 ரிங்கிட் என்ற மதிப்பில் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் நிலைமைக் காரணமாக இந்த ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றது என்று ஓரியண்டல் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

தொடர்ந்து 3 வர்த்தக நாட்களாக சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு சரிந்து காணப்படுகிறது.

மேலும் சிங்கப்பூர் டாலரின் மதிப்பானது முக்கிய நாணயங்களுக்கு மாற்று விகிதங்களை பெற்றுள்ளது.

1 சிங்கப்பூர் டாலரின் மதிப்பு 123.91 ஜப்பானிய யென்னாகவும், 1 சிங்கப்பூர் டாலரின் மதிப்பு 0.775972 என்று அமெரிக்க டாலராகவும் உள்ளது.