MRT ரயிலில் புகை கசிவு..!! பயணிகளின் நிலை என்ன..??
சிங்கப்பூர்: செம்பவாங் MRT நிலையத்தில் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஜூரோங் கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்த சுரங்கபாவே ரயிலில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியது.
அவ்வப்போது சுரங்க பாதையின் நடைமேடையில் ஏராளமான பயணிகள் இருந்தனர் ரயிலிலிருந்து வருகின்றார் புகையால் சிலர் அவர்களது வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டனர் மற்றும் சிலர் புகைப்படம் எடுப்பதற்காக அவர்களது கைபேசிகளை எடுத்தனர். அப்போது சுரங்கப்பாதை நிலைய ஊழியர்கள் சுரங்கப்பாதைக்குள் இருந்த புகையை வெளியேற்றுவதற்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இது குறித்த விசாரணை நடந்த பிறகு, SMRT நிறுவனம் சுமார் 8 10 மணி அளவில் வடக்கு – தெற்கு வழிதடத்தில் உள்ள செம்பவாங் MRT நிலையத்தில் ஒரு ரயிலின் அடிபுரத்திலிருந்து புகை வெளியேறியது தெரியவந்தது.
இதில் பிரேக்கிங் அமைப்பானது விடுவிக்கப்பட முடியாத நிலையில் பிரேக்கிங் நிலையிலேயே நீடித்த காரணத்தினால் புகை வெளிப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஊழியர்கள் அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக இறங்குவதற்கு உதவினர். MRT நிறுவனமானது இந்த சம்பவத்தை உறுதி செய்த உடன் மேலதிக ஆய்வுக்காக ரயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இருந்தாலும் சுரங்கப்பாதை சேவை வழக்கம் போல் தொடர்ந்து இயங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பயணிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதாக எந்த அறிக்கையிலும் இடம் பெறவில்லை.