சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக டிஜிட்டல் முறையில் ஏமாற்றும் குற்றங்கள் அதிகரித்த வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் மார்ச் மாதம் முதல் தற்போது வரை குறைந்தது டிஜிட்டல் முறையில் நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த வீடியோக்கள் பரவி வருகின்றன என புகார்கள் வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களினுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல அவர்கள் உடைய வீடியோ மற்றும் புகைப்படங்கள் காவல்துறை அலுவலகம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள் கூறிய அறிவுறுத்தல்களை கேட்க வேண்டும் என்று அச்சுறுத்துகின்றனர். கேட்கவில்லை எனில் இந்த படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்த காவல்துறை நேற்று (ஏப்ரல் 14) மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது போன்ற பாதிப்பில் சிக்கியவர்கள் பொதுவாக தங்கள் அலுவலகம் மின்னஞ்சல் முகவரிகளுக்கு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை காட்டும் டிஜிட்டல் முறையில் மாற்றி அமைக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கொண்ட மின்னஞ்சல்களையும் பெறுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அனுப்புபவர்கள் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்வதோடு அவர்கள் இணங்க மறுத்தால் அந்த படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாகவோ அல்லது பாதிக்கப்பட்டவரின் மேல் அதிகாரிகள் அல்லது அவர்களுடன் பணி புரியும் ஊழியர்களுக்கு அனுப்புவதாக பயமுறுத்துகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுடைய தகவல்களை பெற்றிருக்க வாய்ப்புள்ளது என காவல்துறை சுட்டிக்காட்டி இருக்கிறது.
இது போன்ற உள்ளடக்கத்தை பெற்றால் பொதுமக்கள் அமைதியாக இருக்கும் மாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் மேலும் அனுப்புபவரை தொடர்பு கொள்ளவும் அல்லது பணம் அல்லது கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்களை செய்யவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் உடனடியாக இதுபோன்ற சம்பவங்களை குறித்த தகவலை காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் எனவும் மின்னஞ்சல் வலன் உள்ளடக்கங்களையும் அவர்களிடம் வழங்க வேண்டும் என்றும் காவல்துறையின் பணிவுடன் கேட்டுக் கொண்டுள்ளது.