Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!!

Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!!

இத்தாலியில் நேற்று(ஏப்ரல் 16) நேபிள்சில் உள்ள கிரெடிட் அக்ரிகோல் வங்கி கிளைக்குள் முகமூடி அணிந்த நிலையில் அடையாளம் தெரியாத மூன்று கொள்ளையர்கள் திடீரென புகுந்தனர்.

அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 25 பெயரை பணயகைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். மேலும் கொள்ளையர்களில் ஒருவர் ஆயுதமும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல டஜன் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து பணயகைதிகளையும் அனுப்பியுள்ளனர்.

அதன் பிறகு, திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு கழிவு நீர் கால்வாய்களுக்கு செல்லும் சுரங்கப்பாதை வழியாக தப்பிச் சென்றுள்ளனர் என்பது தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் கொள்ளையர்களை தேடுவதற்காக சுமார 40 அதிகாரிகளையும் அத்துடன் மோப்ப நாய்களையும் திருட்டு நடந்த சுற்றுப்பகுதியில் ஈடுபடுத்தி உள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கை ரேகைகளை சேகரித்து வருகின்றனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பணயகைதிகளாக இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக பலத்த காயம் எதுவும் ஏற்படாமல் வெளியில் வந்ததாக நேபிள்ஸ் ஆளுநர் மைக்கேல் டி பாரி ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK