POFMA சட்டத்தை மீறியதற்காக சமூக ஆர்வலர் மீது குற்றச்சாட்டு..!! யார் அந்த நபர்..??
சிங்கப்பூரில் இணைய வழி பொய்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் சட்ட (POFMA) அலுவலகமானது முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் முக்கிய தகவலை இன்று (ஏப்ரல் 21)றிக்கை வெளியிட்டுள்ளது.
37 வயதைச் சேர்ந்த ஒரு பெண் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2,3 ஆகிய தேதிகளில் அரசாங்கம் சட்டத்தின் உரிய நடைமுறைகள் இல்லாமல் தன்னிச்சையாக மரண தண்டனைகளை ஏற்பாடு செய்து நிறுத்தி வைத்ததாகவும், போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை நிரூபிப்பதற்கு அரசு சட்டப்படி பொறுப்பல்ல எனவும் உள்ளாட்சி செயற்பாட்டாளர் கோகிலா அண்ணாமலை அவர்கள் கூறியிருந்தார்.
பிறகு அவரது கூற்றுகள் பொய்யானது என கருதப்பட்டதால், அதே ஆண்டான(2024) அக்டோபர் 5 ஆம் தேதி அதிகாரிகள் அவருக்கு ஒரு திருத்த உத்தரவை பிறப்பித்தனர்.
அந்த திருத்த உத்தரவில் கோகிலா அண்ணாமலை தனது பதிவுகளில் ஒரு திருத்த அறிக்கையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் அவர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் தவறிய குற்றத்திற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனவே நியாயமான காரணம் இல்லாமல் திருத்த உத்தரவை மீறிய குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் பெண்ணினுடைய பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் மீடியா கார் நிறுவனத்தின் ஆங்கில மொழி செய்தி இணையதளமான CNA வில் செய்தியில் அந்தப் பெண்ணின் பெயரை கோகிலா அண்ணாமலை என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கோகிலா அண்ணாமலை மீது வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.