சாங்கி விமான நிலையத்தில் சோதனை..!! சிக்கிய ஆடவர்..!!

சாங்கி விமான நிலையத்தில் சோதனை..!! சிக்கிய ஆடவர்..!!

போர்ச்சுக்கலை சேர்ந்த 25 வயது ஆடவர் ஏப்ரல் 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.

அவர் வந்த மறுநாளே சிங்கப்பூரிலிருந்து புறப்பட இருந்தார்.

சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்த உடன் அவருடைய உடைமைகள் மீதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது K9 பிரிவின் மோப்ப நாய்களும் சோதனைக்கு ஈடுபட்டன.

ஆடவரின் பயணப்பெட்டிகளில் சந்தைக்கும் விதமாக பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, இறுதியாக போதைப்பொருள் பொட்டலங்கள் மொத்தமாக 68 இருப்பது தெரியவந்தது.

அதில் 36.3 கிலோகிராம் கஞ்சா இறந்ததாக ICA தெரிவித்துள்ளது. இது குறித்த விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

36 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற குற்றத்திற்காக ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

500 கிராமுக்கு அதிகமான கஞ்சாவை கடத்தும் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK