போக்குவரத்து நெரிசல் குறித்து ICA வெளியிட்ட அறிவிப்பு..!!
குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (ஏப்ரல் 25) காலை 9:11 மணிக்கு முகநூலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறித்து பதிவிட்டுள்ளது.
மலேசியா பக்கத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று காலை உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் இருந்து வெளியேறும் வாகனங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
எனவே போக்குவரத்து நிலவரங்களை பயணிகள் புறப்படுவதற்கு முன்பு சரி பார்த்து செல்லுமாறு ICA அறிவுறுத்தியுள்ளது.
CHECKPOINT.SG என்ற மொபைல் செயலியின் படி காலை 11:12 மணி நிலவரப்படி சிங்கப்பூரிலிருந்து உட்லண்ட்ஸ் சோதனை சாவடி வழியாக மலேசியாவின் செல்வதற்கான பயண நேரமானது சுமார் 70 முதல் 100 நிமிடங்களாகவும், ஜோகூர் பார்வையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்கான பயண நேரமானது சுமார் 25 முதல் 35 நிமிடங்களாகவும் இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.