மே - ஜூலை காலாண்டின் வாகன உரிமைச் சான்றிதழ் (COE) குறித்த அப்டேட்..!!
மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டின் வாகன உரிமைச் சான்றிதழ்களின் (COE) ஒதுக்கீடு குறித்த முக்கிய அப்டேட்களை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (ஏப்ரல் 24) அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுக்கு 18,824 COE சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான COE ஒதுக்கீடு 19,052 என்ற எண்ணிக்கை உயரும். எனவே கடந்த காலாண்டை ஒப்பிடும்போது மொத்த ஒதுக்கீடு 1.2% ஏற்றமடையும் என LTA தெரிவித்துள்ளது.
புதிய ஒதுக்கீட்டின் ஏலமானது மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு உயர்ந்ததற்கு ‘B’ பிரிவு COE சான்றிதழ்கள் 7% ஏற்றம் கண்டு 5,025 என்ற எண்ணிக்கையை அடைந்தது ஒரு முக்கிய காரணமாகும்.
‘C’ பிரிவு வர்த்தக வாகனங்களின் ஒதுக்கீடு 1,742 என்று மாற்றமில்லாமல் இருந்தாலும் பொது பிரிவு (E) ஒதுக்கீடு 1526 என்ற எண்ணிக்கைக்கு உயரும் எனவும் LTA விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
அடுத்த மாதம் தொடங்கியதும் முதல் மூன்றாம் திங்கட்கிழமைகளில் ஏலம் நடைபெறும். விதிவிலக்காக ஜூன், ஜூலை மாதங்களுக்கு இடையே மற்றும் கூடுதலாக மூன்று வார இடைவெளி ஏலத்துக்காக வழங்கப்படும்.