ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!!

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!!

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் இணைப்பு (RTS Link), அதன் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. RTS தண்டவாளத்துக்கு அருகே பல ரயில்கள் வேகமாக தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது.

RTS திட்ட குழு கடந்து சில மாதங்களாக அதன் மைல்கல் பகிர்ந்து கொள்கின்றது.

இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 5ஆம் தேதி எல்லைத் தாண்டிய விரிவுரையில் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மேலும் அதையெடுத்து ஜோகூர் பாருவில் உள்ள வாடி வனா முனையத்தில் இருந்து உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திற்கு வர RTS ரயில் ஒன்று தயார் நிலையில் உள்ளது.

இந்த மாதம் 22 ஆம் தேதி சிங்கப்பூர் மற்றும் மலேசியப் போக்குவரத்து அமைச்சர்கள் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர்.

அங்கு தானியக்கக் குடிநுழைவு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், அவை சோதிக்கப்படுவதையும் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் பதவியேற்றியக் காணொளியில் காண முடிகிறது.

மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கும் தமது மலேசியக் கடப்பிதழைக் குடிநுழைவு வாசலில் காணப்பட்ட புகைப்படம் எடுப்பதையும் அந்த காணொளி காட்டுகிறது.

பல ரயில்களை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் சோதித்துப் பார்த்ததாக RTS இணைப்பை இயக்கம் RTSO நிறுவனம் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.

அந்த சோதனை விரிவான சோதனையில் ஒரு அம்சம் என்றும் கட்டமைப்பின் பாதுகாப்பை வெளிப்படுத்தவும் செயல்பாடுகளை உறுதி செய்வோம் பலகட்ட சோதனைகள் நடத்தப்படும் என RTSO அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் இம்மாதம் 3- ஆம் தேதி திரு லோக் அவர்கள் புக்கிட் சாகார் சுங்க குடிநுழைவு, தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு சென்று இருந்தார்.

பொதுமக்களுக்கு அறிவுக்கும்முன் இந்த ரயில் கட்டணங்கள் குறித்த பரிந்துரைகளை RTSO நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசாங்கங்களிடம் முன்வைக்கும் என்று அங்கு தெரிவித்தார்.

RTS இணைப்பு இந்த ஆண்டின் (2026 இறுதிக்குள் தனது சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK