சிங்கப்பூரும் இங்கிலாந்தும் இணைந்து கூட்டு நடவடிக்கை..!! சிக்கிய ஏழு பேர்..!!
சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு போதை பொருள் கடத்தல் நிகழ்வை முறியடிப்பதற்காக சிங்கப்பூரின் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவும் (CNB) பிரிட்டன் உடைய சட்ட அமலாக்க முகமைகளும் இணைந்து ஒரு கூட்டு சர்வதேச நடவடிக்கையை தொடங்கியுள்ளன.
CNB இன்று (ஏப்ரல் 27) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஏப்ரல் 3 அன்று பாசீர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 20 அடிக் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 509 கிலோகிராம் கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது.
இந்த போதைப் பொருளை சிங்கப்பூர் வழியாக ஐக்கிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்று விசாரணையின் போது தெரியவந்தது.
இதன் பிறகு, அதிகாரிகள் ஐக்கிய ராஜ்ஜிய உள்துறை அமைச்சகத்தின் தொடர்புடைய துறையுடனும்(HOIO), ஐக்கிய ராஜ்ஜியம் எல்லைப் படை மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் குற்றப்புலனாய்வு பிரிவுடனும் (WM ROCU) இணைந்து போதைப்பொருள் கடத்தல் வலை அமைப்பை தவிர்க்கவும் பெருமளவு போதை பொருட்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திற்குள் melum கொண்டு வருவதை தடுப்பதற்காகவும் ஒரு எல்லை பாதுகாப்பு சட்ட அமலாக்க நடவடிக்கையை தொடங்கினர்.
உளவு தகவல்களை பகிர்தல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமாக பிரிட்டனுக்கு அனுப்பப்பட இருந்த ஒரு கொள்கலனை இருந்து பிப்ரவரி 25 அன்று, மேலும் 412 கிலோகிராம் கஞ்சாவை பிரிட்டிஷ் அதிகாரிகள் பறிமுதல் செய்ததையும் இதன் மூலம் கீழ்நிலை போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்தும், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, பிரிட்டிஷ் சட்ட அமலாக்கத்துறை ஒரு நடவடிக்கையை தொடங்கியது. அதில் மேலும் பல போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாது இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் மீது ஏற்கனவே போதை பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது சம்பந்தப்பட்ட மற்ற நபர்களையும் தொடர்ந்து தேடி வருவதாகவும் பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கிடைத்த வெற்றி ஆனது, சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பின் செயல் திறனை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாது, நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் களத்தில் எதிர்த்து போராடுவதில் அனைத்து தரப்பினரின் உறுதியையும் வெளிப்படுத்துகிறது என CNB தெரிவித்துள்ளது.
இது போன்ற நாடு கடந்த போதை பொருள் குற்றங்களை வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட முகமைகள் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வதையும் அதன் செயல்பாடு ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தும் எனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.