ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்த டாக்சி விபத்து..!!
இணையத்தில் வைரலாகும் காணொளி..!!
சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 12) அதிகாலை நேரத்தில் இரண்டு டாக்ஸிகள் திடீரென விபத்துக்குள்ளானது.
இதுகுறித்த காணொளி பதிவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த காணொளி பதிவை nightridersg என்ற டிக் டாக் பயனர் பதிவேற்றியுள்ளார்.
நிலத்தடி வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே உள்ள ComfortDelta டாக்ஸிகள் நிறுத்தப்பட்டுள்ளதும் அவற்றில் ஒரு டாக்ஸியின் பின்பகுதியில் இந்த விபத்தினால் கடுமையாக சேதமடைந்துள்ளதும் தெரிகிறது.
இந்த விபத்தில் 60 வயதான டாக்ஸி ஓட்டுனர் காயமடைந்துள்ளார். மற்றொரு நபரான 72 வயது ஓட்டுநர் எந்த ஒரு செய்தமும் இன்றி உள்ளார்.
தரையில் விழுந்து கிடந்த அறுபது வயது நபருக்கு பல காவல் தறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியாளர்களும் மூன்று மருத்துவ உதவியாளர்களும் உதவி செய்வது அந்த காணொளி பதிவில் தெரிகிறது.
மேலும் இந்த விபத்து குறித்த தகவலானது காவல்துறையினருக்கு நேற்று ஜூன் 12 நள்ளிரவு நேரத்தில் கிடைத்ததாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்த சுயநினைவுடன் இருந்த அறுபது வயது டாக்ஸி ஓட்டுநரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
72 வயதைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் காவல் துறையில் விசாரணை உதவி வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது மேலும் விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.