NEA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் கட்டண உயர்வு..!!

NEA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் கட்டண உயர்வு..!!

சிங்கப்பூரில் குப்பை அகற்றும் கட்டணம் உயர இருப்பதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) தெரிவித்திருக்கிறது.

இந்த கட்டண உயர்வானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது.

கட்டண உயர்வு குறித்த விவரங்கள் பின்வருமாறு:
கழக வீடுகள் அல்லது தனியார் அடுக்குமாடி வீடுகள்:
10 வெள்ளி 20 காசிலிருந்து 10 வெள்ளி 64 காசாக உயர்வு

தரை வீடுகள்:
34 வெள்ளியில் இருந்து 35 வெள்ளி 50 காசு ஆக உயர்வு

சிங்கப்பூரின் உள்ள ஒட்டு மத்த கழிவினை நிர்வகிக்க கட்டண உயர்வு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடு மற்றும் மனிதவள செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது என தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியுள்ளது.

வீடமைப்பு வளர்ச்சி கழக குடியிருப்பாளர்கள் U-Save கழிவு மூலம் கட்டண உயர்வை ஈடு செய்ய முடியும். இதில் தகுதி பெரும் குடும்பங்கள் SP சர்வீசஸ் கணக்குகளில் நேரடியாக கழிவுகளை பெறும்.

2026 நிதியாண்டிற்கான U-Save கழிவுகள் ஜூலை, அக்டோபர், அடுத்த ஆண்டு (2027) ஜனவரி ஆகிய மாதங்களில் வழங்கப்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதம் கழிவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் குப்பை அகற்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK