சிங்கப்பூரில் Singpass மோசடி..!! 15 பேர் மீது குற்றச்சாட்டு..!!
சிங்கப்பூரில் வேலை அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்காக போலி நிறுவனங்களை அமைப்பதற்காக சிங்பாஸ் கணக்குகளை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கிய குற்றத்திற்காக 15 சிங்பூரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறையும், மனித வள அமைச்சகமும் (MOM) நேற்று (ஏப்ரல் 28) இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கைது செய்யப்பட்ட 15 நபர்களில் 14 பேர் ஆண்கள் மற்றும் ஒருவர் பெண் தெரிவித்துள்ளது.
அந்த 15 நபர்கள் மீதும் கணினி முறைகேடு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
வேலை அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கப் போலி நிறுவனங்களை பயன்படுத்தியக் கும்பல்களைப் பிடிப்பதற்காக காவல்துறையும், MOM-ம் நடத்திய அமலாக்க நடவடிக்கையின் போது 2024 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் இந்த 15 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Telegram மூலம் இந்த 15 பேர் சேர்ந்த கும்பல் அவர்களது சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்த மூன்றாம் தரப்பினருக்கு அனுமதித்ததற்காக பண வெகுமதிகளைப் பெற்றுள்ளனர்
2024 ஆம் ஆண்டு நடந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், மனிதவள அமைச்சகம் கடந்த நவம்பரில் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய வழங்குகளில் 18 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 15 சந்தேக நபர்கள் மீது கணினி முறைகேடு சட்டத்தின் கீழ் இன்று (ஏப்ரல் 29) குற்றம் சாட்டப்பட உள்ளது. கணினி தரவுகளை அனுமதி இன்றி பயன்படுத்தியது, உள்நுழைவு குறியீடுகளை வழங்கியது மற்றும் டிஜிட்டல் அடையாளச் சேவை தொடர்பான தகவல்களை வழங்கியதற்காகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது.
இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், $5,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் தேசிய டிஜிட்டல் அடையாளச் சேவை தொடர்பான உள்நுழைவுக் குறியீடுகளை அனுமதி இன்றி வழங்கிய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், $10,000அபராதமும் விதிக்கப்படும்.