தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் (P1) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) இன்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது

மக்கள் தொகை மாற்றம் மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பள்ளிகளின் செயற்கை ஒதுக்கீடுகளை அமைச்சகம் தொடர்ந்து சரி செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையில் எண்ணிக்கை குறைக்கப்படும்.

இவ்வாறு செய்யும்போது பள்ளிகளை ஒன்றிணைக்கவோ, பள்ளிகளை மாற்றவோ தேவையில்லை. மாணவர்களுக்காக சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு இடங்களில் சமமான எண்ணிக்கையில் தொடக்கப் பள்ளிகள் வைத்திருக்க முடியும் என்று MOE அறிவித்துள்ளது.

பிறந்த நாள்களின்படி பிரிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் கட்டப்பட உள்ள வீடமைப்புத் திட்டங்களுக்கு ஏற்றவாறு தொடக்கநிலை ஒன்று (P1) காண தேவையை கல்வி அமைச்சகம் தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும்.

இதனால் தற்போதைய முதலாம் வகுப்பு சேர்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று கல்வி அமைச்சரான லீ யி ஷியான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான (2027) பள்ளியில் சேரும் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை இந்த ஆண்டு (2026) ஜூன் 30-ம் தேதி முதல் அக்டோபர் 30 வரை பல கட்டங்களாக நடத்தப்படும் எனவும் MOE தெரிவித்துள்ளது.

புதிய நடவடிக்கை எந்த கட்டத்தில் உள்ளது என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்வதற்கும், தங்களது பிள்ளைகள் எந்த பள்ளிக்கு தகுதி பெறுவார்கள் என்பதையும் கீழ்காணும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். 👉”https://www.moe.gov.sg/primary/p1-registratiin/how-to-register”

இந்த இணையதளத்தில் சிம்பாஸ் விபரங்களைக் கொண்டு உள்ளே சென்று ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு பெற்றோர் மற்றும் பதிவு செய்தால் போதும். பதிவு நடவடிக்கை இடம்பெறும்போது உதவி தேவைப்படுவோர் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளியை மின்னஞ்சல் வழியாக காலை 9 மணியிலிருந்து மாலை 4:30 மணிக்குள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதில் பதிவு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே என்னென்ன தொடக்கப் பள்ளிகள் உள்ளது என்பதையும், எத்தனை இடங்கள் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் விண்ணப்பதாரர் எண்ணிக்கை, காலியாக இருக்கும் இடங்கள் போன்ற தகவல்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK