டிஜிட்டல் மேம்பாடு தகவல் மற்றும் சுகாதார துறைக்கான மூத்த இணை அமைச்சர் சான் கிட் ஹாவ் நேற்று (மே 8) விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 40,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவார்கள் என்ற செய்தியை இந்த விருது வழங்கும் விழாவில் அறிவித்தார்.
இந்த நடவடிக்கை மூலமாக கருத்துக்களின் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பையும் முழு உணர்வுகளின் தொடர்ச்சியான பரிமாற்றத்தையும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
எங்கள் ஆராய்ச்சி முடிவுகள் நிறைவடையும் வரை காத்திருக்காமல் அதை தயாரானவுடன் அதனை வெளியிடுவோம். மேலும் இன்று மென்பொருள் உருவாக்கத்தில் நாம் செய்வது போலவே அவற்றையும் தொடர்ந்து மேலும் செம்மை படுத்தி அதனை மேம்படுத்தவும் அடுத்து சில மாதங்களில் இதன் முடிவுகளை வெளியிடுவதாக கூறியுள்ளனர்.
விருது வழங்கும் விழாவில் சிங்கப்பூரின் தொழில்நுட்ப சூழலுக்கு ஆற்றிய பங்களிப்பு களுக்காக பல தொழில்துறை தலைவர்களும் இந்த விருதுகளை பெற்றனர்.
புத்தாக்க சூழல் அமைப்பின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் வாங் ருய்ஜியும் விருது பெற்றவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தால் தொடங்கப்பட்ட இந்த தொடர் நடவடிக்கைகள் அவர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன்களை பெறுவதற்கு உதவும் என கூறப்பட்டுள்ளது.