தடையற்ற வர்த்தகம்: சிங்கப்பூர் யாருடன் கை கோர்க்கிறது..??

தடையற்ற வர்த்தகம்: சிங்கப்பூர் யாருடன் கை கோர்க்கிறது..??

தோக்கியோவில் அனைத்துலக கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் பங்கேற்றார்.

தற்போது இருக்கும் சூழலில் உலகமயமாதல் அவசியம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தகத்தின் முக்கியத்துவம் குறித்து சிங்கப்பூர் அமைச்சர்கள் விரிவாக பேசியுள்ளனர்.

எந்த நாட்டுடன் இணைந்துள்ளது?
ஜப்பான்

இரு நாடுகளும் மேற்கொண்ட புதிய ஒப்பந்தங்கள் என்ன?
வர்த்தக மேம்பாடு: சிங்கப்பூரின் Enterprise Singapore மற்றும் ஜப்பானின் ஜெட்ரோ அமைப்புகள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை எளிதாக்க தங்களை ஒத்துழைப்பு உடன்படிக்கையை புதுப்பித்து இருக்கின்றன.

உணவு வர்த்தகம்: இரண்டு நாடுகளின் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் இணைந்து விவசாய உணவு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப கூட்டணி: டிஜிட்டல் உள் கட்டமைப்பு, ஏஐ பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் குறைந்த கார்பன் ஆற்றல் தீர்வுகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி இருக்கிறது.

ஜப்பான் – சிங்கப்பூர் பொருளாதாரம் கூட்டு ஒப்பந்தம் திருநாட்டு பொருளாதார உறவின் மிக முக்கிய துணாக விளங்க 2002இல் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டது ஆகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 92.1% பொருட்களுக்கு சுங்கவரி விளக்கு அழைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய முதலீட்டு நாடாகவும் சிங்கப்பூர் ஜப்பானின் ஆசிய அளவிலான முதன்மை முதலீட்டு நாடாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK