உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..??
ஜூன் 4ஆம் தேதி காலை 9:42 மணிக்கு சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான மோட்டார் சைக்கிள் படத்தில் மலேசியாவை சேர்ந்த ஆடவர் ஒருவர் போக்குவரத்துக்கு எதிர் திசையில் நடந்து சென்றுள்ளார்.
இதனை துணை காவல் படை அதிகாரி கவனித்ததாக குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
உடனே அந்த ஆடவரை அதிகாரிகள் தேட முயன்றனர். அவர் மலேசியாவை நோக்கி ஓட தொடங்கினார் பிறகு அதிகாரி அவரை நிற்கும்படி கூறிய போது அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஓட ஆரம்பித்தார்.
இறுதியாக அதிகாரிகளிடம் அவர் சிக்கினார் விசாரணையின் போது அவரது ரொக்கட்டையை தவறவிட்டதாக பெரியவந்துள்ளது மேலும் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
இந்த சம்பவத்தின் காரணமாக, ஆணை அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டனர் எங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக சோதனை சாவடியை முடக்கும் நடவடிக்கை தொடங்கினர் என ஆணையம் கூறியுள்ளது.
அதிகாரிகள நாடு வரை கைது செய்து ஆணையத்தின் அமலாக்க பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர் தற்போது விசாரணையில் இருப்பதாக ஆணையம் கூறியுள்ளது.
இவர் பரபரப்பை ஏற்படுத்திய காரணத்தினால் உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் சிறிது நேரம் முடக்கம் ஏற்பட்டது.
விசாரணையின் போது சிங்கப்பூருக்குள் நுழைய எண்ணமே இல்லை என்று அவர் கூறியதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் அதிகாரிகளின் ஆணையை பின்பற்ற தவறிய குற்றத்திற்காகவும் அவர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுத்த காரணத்திற்காகவும் அந்த ஆடவர்க்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அவர் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு தடையும் விதிக்கப்பட்டு சிங்கப்பூரை விட்டு அவர் வெளியேற்றப்பட்டார்.
இது போன்ற குற்றங்கள் புரிபவர்களுக்கு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ், குடி நுழைவு அதிகாரியின் பணியில் இடையூறு விளைவித்த குற்றத்திற்காக $4,000 வரையிலான அபராதம் 12 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.