மே மாதத்தில் மெட்ரோவின் அதிரடி முன்னேற்றம்..!! LTA வெளியிட்ட அறிக்கை..!!
நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) MRT யின் நம்பகத்தன்மை குறித்த அறிக்கையை நேற்று (ஜூன் 12) வெளியிட்டது. தரவுகளின் படி ஒட்டுமொத்த எம்ஆர்டி வளையமைப்பின் செயல் இழப்புகளுக்கு இடையிலான சராசரி கிலோமீட்டர் ஏப்ரல் மாதத்தில் 2.22 மில்லியன் கிலோமீட்டர் இருந்து மே மாதத்தில் 2.5 மில்லியன் கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அர்த்தம் என்னவென்றால் சராசரியாக பயணிக்கப்படும் ஒவ்வொரு 2.5 மில்லியன் கிலோமீட்டருக்கும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒரு தாமதம் ஏற்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக செயல் இழப்புகளுக்கு இடையிலான சராசரி கிலோமீட்டர் இரண்டு மில்லியன் கிலோமீட்டரை தாண்டி உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
SBS TRASNSIT நிறுவனத்தால் இயக்கப்படும் வடகிழக்கு வழித்தடம் மே மாதத்தில் 4.46 மில்லியன் கிலோமீட்டர் செயலிழப்புகளுக்கு இடையேயான சராசரி கிலோமீட்டர்களை கொண்டு இருந்தது. ஒவ்வொரு 4.46 மில்லியன் கிலோமீட்டர் இருக்கும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒரு தாமதம் ஏற்பட்டது குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
SMRT ஆல் இயக்கப்படும் வடக்கு – தெற்கு வழித்தடம் மற்றும் வட்ட வழித்தடத்தின் நம்பகத்தன்மையும் மேம்பட்டு உள்ளது.லூப் வழித்தடத்தில் சராசரி பழுது இடைவெளி கிலோமீட்டர் ஏப்ரலில் 2.36 மில்லியன் கிலோமீட்டர் இருந்து மே மாதத்தில் 3.5 மில்லியன் கிலோமீட்டர் கணிசமாக அதிகரித்து உள்ளது.
வடக்கு – தெற்கு வழிதடத்தில் ஏப்ரலில் 1.4 மில்லியன் கிலோமீட்டர் இருந்து 1.65 மில்லியன் கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது.
தாம்சன் – கிழக்கு கடற்கரை வழிதடத்தின் நம்பகத்தன்மை ஏப்ரலில் 356,000 கிலோமீட்டரில் இருந்து மே மாதத்தில் 355,000 கிலோமீட்டராக சிறிது குறைந்துள்ளது. மே 3 அன்று, தாம்சன் கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவையில் தற்காலிக இடையூறு ஏற்பட்டது. இது மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பழுது பார்க்கப்பட்டு பிறகு அது படிப்படியாக சரி செய்யப்பட்டது.
தாம்சன் கிழக்கு கடற்கரை வழித்தடம் இன்னும் கட்டுமானத்தில் இருப்பதினாலும் தினசரி செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புடன் ஒரே நேரத்தில் அமைப்பு ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படுவதாலும் நம்பகத்தன்மை இன்னும் ஏற்ற இறக்கமாக இருக்கின்றது. எனவே அதன் செயல்பாடு செயல் திறன் இன்னும் மெட்ரோ நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த செயல் திறனில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் அதை சுட்டிக்காட்டி உள்ளனர்.
சிங்கப்பூரின் MRT வலை அமைப்பின் ஒட்டுமொத்த நம்பகத் தன்மையானது மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் செயலிழப்பு வழக்கு இடையேயான சராசரி கிலோமீட்டர் அதிகரித்துள்ளன. 6 MRT வழித்தடங்களில் வடக்கு – தெற்கு வழித்தடம், வடகிழக்கு வழித்தடம் மற்றும் வட்ட வழித்தடம் ஆகியவற்றில் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.
அதேசமயம் தாம்சன் கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் நம்பகத்தன்மை குறைந்துள்ளது. டவுன் டவுன் வழித்தடம் மற்றும் கிழக்கு – மேற்கு வழித்தடம் ஆகியவற்றில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடும்போது மே மாதத்தில் ரயில் சேவை பழங்கள் மற்றும் ரயில் நேரம் தவறாமல் குறித்த விகிதங்கள் இரண்டும் சற்று குறைந்த இருந்தாலும் அவைகள் 99.82% மற்றும் 99.10% ஆக, 99% – க்கு மேல் நிலைத்து இருந்தன என்பதை நேற்று வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.